கவிதைமணி

தண்ணீருக்கு இரத்தம் :  அழகூர். அருண்.  ஞானசேகரன்.

கவிதைமணி
 1.  தண்ணீர்க்கு   ரத்தம்சிந்தும்   நிலையின்றிங்கே --- இதற்குத்
                  தானோநாம்   போராடிச்   சுதந்திரம்   பெற்றோம் ?
        உண்மையில்   நாட்டிற்கே   வெட்கக்கேடு ---  இதனால்
                  உருக்குலையும்   நாடிதனின்   ஒருமைப்   பாடும் !
        கண்ணியத்தை   கன்னடியர்   காத்திடவேண்டும் --- கொண்டக்
                  கடமையெனத்   தீர்ப்புதனை   ஏற்றிட   வேண்டும் !
        உண்மையிலே   ராமையாவைப்   போற்றிடவேண்டும்  --- நாட்டின்
                  உச்சநீதி   மன்றத்தீர்ப்பை   மதித்திடும்   போக்கால் !
2 .    நீரைப்பெறப்   போராட்டம்   தமிழகந்தன்னில் --- அந்த
                   நீரைத்தடுக்கப்   போராட்டம்   கன்னடம்   தன்னில் !
        கூர்கெட்டோர்   என்றாக   ஆகவுந்தகுமோ --- இந்தக்
                   குவலயமே   நமைகண்டுச்   சிரித்திடத்   தகுமாம் !
        யார் இதற்குப்   பின்னாலெனக்   கண்டிடவேண்டும் --- அவனை
                   இன்னாட்டை   விட்டேநாம்   துரத்திட   வேண்டும் !
        சீர்கொண்ட   மரபினராம்   இந்தியரென்ற --- நிலமை
                   சிதறிடவே   காணுவதுக்   கொடுமையுந்   தானே !
3.     நதிநீரைப்   பகிர்வதுவே   முறையென்றாகும்  ---  இந்திய
                    நாட்டுமக்கள்   ஓர்குலமென   உணர்ந்திட   வேண்டும் !
        மதிகெட்டோர்   தாம்நீரைத்   தமக்கெனக்கொள்வார்  ---  அவர்
                    மனுநீதி   தனையுணரா   மக்களென்   றாவார் !
        சதிசெய்தே   அதைத்தடுக்க   எண்ணிடுவோரை  ---  முச்
                    சந்தியிலே   நிறுத்திட்டுத்   தண்டிக்க   வேண்டும் !
        அதிபுத்தி   சாலியெனப்   பேசிடுவோரை  ---  அரசும்
                    அடக்குவதே    கடமையென  உணர்ந்திட  வேண்டும் !
4.     அமைதியதும்    கெடத்தகுமோ   நாட்டினிலே ---  இந்த
                    ஆபத்தைநாம்   உணராமல்   இருப்பதுவோ ?
         நமைஆளத்   தெரியாதார்   எனச்சர்ச்சில்  ---  சொன்னதை
                     நாமின்று   உண்மையென்றும்   ஆக்குவதோ ?
         இமையதுவாய்   அமைதிதனைக்   காப்பதுவே ---  நம்
                     எல்லோரின்   கடமையென்றே   உணர்ந்திடுவோம் !
         சுமையதுவாய்   நாம்பிறரைக்   காண்பதுவோ ---  நாமெலாம்
                      சொந்தமென்ப   தெல்லாமும்   பொய்தானோ ?
5.     இந்தியர்   நாமெல்லாம்   ஓர்தாயின்   மக்கள்
                    என்றிட்ட   எண்ணம்   மக்களுக்   கில்லை !
        எந்தவோர்   நிலையிலும்   கடமைதனை   உணரும்
                   எண்ணமது   சிறிதேனும்   இதயமதில்   இல்லை !
        நிந்திக்கத்   தக்கதே   நாம்போகும்   போக்கு
                  நிச்சயம்   நாடிதன்   நலனுக்குத   வாதாம் !
        சிந்தித்து   நாமெலாம்   மனந்தெளிய   வேண்டும்
                   சீர்பெருமை   தனைகாக்க   நாம்முனைய   வேண்டும் ! 
6.  கன்னடியர்   செய்வதெலாம்   நியாயமதும்   தானோ ?
            கண்டதனை   தீயிட்டுக்   கொளுத்திடவும்   தகுமோ ?
     இன்னதென்ன   விளையாட்டோ   அவர்களுக்   கெல்லாம்
            இழிவான   செயலிதனைச்   செய்திடவும்   தகுமோ ?
     என்னவொரு   ஆணவந்தான்   மன்றத்தின்   தீர்ப்பை
            ஏற்காமல்   ஆர்ப்பாட்டம்   செய்கின்ற  தெல்லாம் ?
     உன்னதமோ ,  அமைதிக்கிது   உகந்ததுவும்   தானோ ,
            உலகமே   நமைக்கண்டு   இழித்துரைக்கத்  தகுமே !
7.  ஆண்டாண்டுக்   காலமதாய்   கர்னாடகம்   வஞ்சிக்கும்
             அநியாயம்   தன்னைநாம்   பொறுத்திடவும்   தகுமோ ?
     வேண்டாதப்   போராட்டம்    தனைசெய்யும்   அவர்கள்
             விளைவினை   சிறிதேனும்   எண்ணிடுதல்   வேண்டும் !
     மாண்புற்ற   மக்களே   அவர்களெனும்   போதில்
             மன்றமதன்   ஆணைதனை  மதித்திடல்   வேண்டும் !
     காண்கின்ற   அராஜகம்   வேண்டாத   ஒன்றாம்
             கடமையென   தீர்ப்பினை   ஏற்பதே    நன்றாம் !
8.  காவேரி   மேலாண்மைக்   குழுசெய்த   தென்ன
            கடமைதனை   உணராமல்  இருப்பதும்   தானோ ?
     பாவிகட்கு   தமிழகத்தின்   தேவைதெரி   யாதோ ,
            பாரா   முகங்காட்டி   இருக்கவும்   தகுமோ ?
     சேவைமனப்   பான்மைதனை   கொண்டிட்டு   அவர்கள்
            சிறப்புற   ஆணைதனை  நிறைவேற்ற   வேண்டும் !
     மேவியபல்   ஆறுகள்   நாடெங்கும்  உண்டாம்
             மேளாண்மை  கொண்டவர்கள்   செயல்புரிதல்   நன்றாம் !
9.  சட்டம் ஒழுங்கு   நாட்டினிலே   நிலைபெற   வேண்டும்
            சத்தியத்தை   மக்களெல்லாம்   மதித்திட  வேண்டும் !
     திட்டமிட்டு   அரஜகந்   தன்னைச்   செய்வோர்
            தேசமிதன்   துரோகிகளென   ஒதுக்கிட   வேண்டும் !
     நட்டமதே   இவர்களினால்   நாட்டுக்   கென்றும்
            நலமதனைக்   காணாதாம்   நாடிது   என்றும் !
     விட்டுவைக்கத்   தக்கவரோ   இவர்கள்   எல்லாம் ,
             வீணர்களால்   பயனில்லை ,  உண்மையும்   தானே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT